என்றும் உன் நினைவே

photography,water,girl,rain,umbrella,woman-05097c2965381f5ec356908386b85c97_h

 
 

மழைக்காலம் 
 
வீதியோரம் 
 
செல்கையில் 
 
திரும்பிப் பார்க்கின்றேன் 
 
என் நினைவு மழையில் 
 
என் ஆசை இதய ரசிகன் 
 
என்னைக் கூபபிடுவதாய் 
 
 
 
 
 
 
 

தேவதையே

காலையில்  தினமும் – என்னை 

துயிலெல  வைப்பது 
விடியலின் தொடக்கம் அல்ல 
உன் கனவின் முடிவே ….
 
சூரியன் உதிக்கும் காட்சியை விட 
உன் வருகை அழகானது .

காதலில் ஒரு சுகம்

சங்கீதம் ,

சாரல் மழை ,
சலங்கையொலி,
இவை எதிலும்இல்லாத
ஒருவித சுகமான
சுருதி
காதலில் கசியும்
கண்ணீர்த் துளியில் உள்ளது….

மனசை நனைத்த காதல்

Imageமழையில் நனைந்த கண்ணாடியில் 

நனையாத விம்பமாய் ,
தேடலில் நனைந்த இதயத்திற்குள் தேடாமல் 
வந்து சேர்ந்த ஒரு காதல் ,
மழைவிட்ட பிறகு 
மரக்கிளையிலிருந்து விழும் 
மழைத்துளிகளாய் ,
காதலை உணர்கையில் 
உதட்டோரம் புன்னகைக்கும் 
சந்தோசத் துளிகள்.
 

கடலின் பாடல்

இராக்கால கடற்கரையைத் தொடும்

கலங்கரை வெளிச்சமும் ,

துடுப்பு வலிக்கும் மீனவனின்
வியர்வைத் துளியை நுகரும் கடலும்,
கடலில் கால் நனைக்க பயப்படும்
குழந்தையின் கால்களை முத்தமிடத் துடிக்கும்
கடலின் நுரையும் ,
பலநாள் கழிந்து கரை திரும்பும்
மீனவ மகனைக்  கானும் தாயின் கண்களும்,
கடல் படுக்கையில்  நளினம் புரியும்
சூரிய மறைவின் அசைவுகளும் ,
பேசும் பாசையை தூசு தட்டிப் பார்த்தால் -அது
கடல் தாயின் தாலாட்டு இசையோ தெரியவில்லை.

சட்டம் பேசும் மெய்

 

 கொட்டும் நீதி முரசை 

வெட்டும் பகை மெட்டை
தட்டித் தகர்க்கும் உளிகள் 
சட்டப் பார்வையின் விழிகள்.
பொய் சாட்சிப் பிழைகள் 
போதை தரும் அளிகள்
நேர்மையது உண்மைத் பார்வை யொழிய 
பொய்யின் போர்வை அல்ல.
 
துட்டுப் பேசும் பாட்டெல்லாம் -உயர்மட்டம் 
ஓட்டுக் கேட்கும் -ஆனால் 
ஒட்டும் கேட்காது .
கட்சித் தழைகள்
காட்சிப் பிழைகள் .
வார்த்தை முளையில்
வக்கீலின்  ஊக்கத் துகள்கள் 
உலகின் வடுக்களை 
உரக்கச் சொல்லும்.
 

பல்கலைக்கழக மாணவனின் உள்ளக்குமுறல்

உயர்தரம் முடித்து புது  உலகில் மனம் உயரப் பறந்தது . கல்வி எனும்   கனவுப்  பூங்காவில் இலட்சிய சிறகினை விரிக்கத்துடித்த எதிர்கால வாழ்வு இடைநடுவில்

சிறகொடிந்தது.  ஒரு காலத்தில் படிப்பு எனும் பட்டங்கள் வாழ்க்கையை தீர்மானித்தன. ஆனால் இன்றோ பணமெனும் பாசுரமே வாழ்க்கையின் வளைவு சுழிவுகளையும் தீர்மானிக்கின்றன. கல்வியும் பணத்திற்காக விற்கப்படும் இவ்வேளையில் இலவசக் கல்வியில் இதயம் மகிழ்ந்த நம் கல்விப் பயணம் இடைநடுவில் கேட்பாரட்டுக் கிடக்கின்றன.சம்பள உயர்விற்கு போராடும் வர்க்கம் ஒரு புறம் , அதை வெட்டிப் பேச்சுக்களால் பூசிமெழுகும் ஒரு கூட்டம் மறு புறம், இரண்டு நரிகளின் நடுவில் அகப்பட்ட ஆட்டுக்குட்டியின் கதையாய் நம் கதி ஒரு புறம்.
                           நேரம் பொன்னானது என்பார்கள் ஆனால் இங்கு உயர்தர பரீட்சை எழுதியதிலிருந்து பதிலுக்கு ஒரு காத்திருப்பு, பல்கலைக்கழக அனுமதிக்கு காத்திருப்பு , பயிட்சிப் பட்டரை முடிவில் ஒரு காத்திருப்பு,பல்கலைக்கழக தொடக்கத்தில் காத்திருப்பு ,இதைவிட பல பயனில்லா காத்திருப்புக்கள் . இப்பிடியே காத்திருந்து காத்திருந்து நேரம் மண்ணாப்  பொய் மனம் ஊனமாய் போய், வேலை தேட ஆரம்பிக்கையில் வயது முதுமைக் கதவருகில் எட்டிப் பார்க்கும் .
பணக்காரனின் மகனாய் பிறந்திருந்தால் திறமை இல்லாவிடினும் கல்வி நமக்கு விற்கப் பட்டிருக்கும். ஆனால் ஏழையாய் பிறந்தவனிட்குதிறமை இருந்தும் ,
தேடல் இருந்தும் கல்வி பயில காசில்லையே?
                                 போராடும் வர்க்கம் மறை முகமாய் தம் வயிறை நிரப்பும். ஏமாற்றும் வர்க்கம் தம் கறுப்பு சந்தையை விருத்தி செய்து கொண்டே இருக்கும். இப்பிடியே போனால் உண்மை இளையனின் மனம் என்ன வெறும் வெற்றிடப் பையா? இல்லை   ஒவ்வொரு இளையர்களின் மனதிட்குள்ளும்  கத்தியின்றி இரத்தமின்றி ஒவ்வொரு போர் நடந்து கொண்டே இருக்கிறது.  அவை வெளி அரங்கத்தில் எட்டிப் பார்த்தால் என்ன நடக்கும்? வேண்டாம் பட்டது போதும்
எதிர்கால சந்ததியின் உயிரும் நடுத்தெருவில் நார் நாராய் கிழிய வேண்டாம் . புத்தி யீவிகளே  நீர் ஒரு தனிப் பகுதி அல்ல , நம்மில் ஒரு பகுதி . எம் தேசத்தின்
எதிர்கால தூண்கள் உறுதிப்பட வேண்டும் என்றால் உம் சிந்தனைக் கைகள் நம் கல்விக் கதவைத் திறக்கட்டும்.

இசை

Image

 

வறண்ட இதயத்தை வருடுகின்ற

மென்மையின் இறகுகள்.

இறுகிய இதயத்தை இளகச் செய்யும்

இனிமையின் தேவ அமிர்தம் .

காதுகளிற்குள் ரீங்காரமிடும் 

கற்கண்டு வண்டுகள் .

கொல்லாமல் கொல்லும்

கொங்கு நாட்டு அழகின் தேவதை.

கோடையில் உதிரும்

பனித்துளிகளின் ஸ்பரிசங்கள் .

கனவுகளும் தோல்வியே

Image

என் இதயத்தில் தெறித்த

உன் மேல் நான் கொண்ட ஆசைகள் .

நீரில் தெறித்த நிலவின் விம்பமென,

மழைநீரில் சென்ற காகிதக் கப்பலாய்,

கனிவாய் வந்த கனவு நடுவில் கலைந்ததாய்,

நாடு இரவில் நாதியத்துக் கிடக்கும் நிலவாய்,

தீயில் கருகிய கவிதைகளாய்,

எங்கோவொரு தனி வீட்டில் நடு இரவில்

எரியும் விளக்காய்,

துடுப்பு இல்லாத படகாய்,

காதல் செய்ய தகுதியில்லாமல்

தனிமைப்பட்டு விட்டது.

மறுபக்கங்களில் இதுவும் ஒன்று

Image

அரசியல்… ஏழைகளின் ஏக்கங்கள்

உறங்கும்  சுடுகாடு.

கறுப்பு பணம் தங்கிச் செல்லும்

ஏழைகளின் ஏமாற்ற  வங்கி .

அங்கே வெள்ளை ஆடை அணிந்த

கொள்ளை மனிதர்கள் ஏராளம் .

வரையப்படாத சட்டங்களின்

திட்டங்கள் தாராளம் .

உண்மைகளின் கைரேகைகள்

சிதறிக்கிடக்கும் சிறைச் சாலைகளில்

வாழத் துடித்தவர்களின் மரண வேதனைகள்

வெந்து கொண்டிருக்கின்றன.

எத்தனையோ உரிமைகள்  ஊமை  வேடம் தரித்து ,

ஊனமான தம் வாழ்வை ஆமைவேகத்தில்

நகர்த்திக்கொண்டிருக்கின்றன.

அங்கே……..விதவைகளின் கண்ணீரை

மனித மிருகங்கள் மதுவாக்கி குடிக்கின்றன.

இன்னும்        நோக்கினால்

இப்பிடி எத்தனையோ அதிர்வுகளை

ஒட்டுக்கேட்கலாம்.